காணாமல்போன பிள்ளைகளுக்காக இலங்கையில் தாய்மார் அணி திரண்டுள்ளனர்!

இலங்கையில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வதுகூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியது.

கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போதே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 80 ஆண்டுகளாக காணப்படாத வேகத்திலும் தீவிரத்திலும் உலக அரங்கில் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் வளங்களுக்கான கடுமையான போட்டி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையேயும் நாடுகளுக்குள்ளும் உள்ள மோதல்களைத் தீர்க்க பலத்தைப் பயன்படுத்துவது இயல்பாக்கப்பட்டு வருகிறது.

போர்ச் சட்டங்கள் கொடூரமாக மீறப்படுகின்றன, பொதுமக்கள் பெரும் துன்பங்களை நம் கண்முன்னே வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினாவிலிருந்து சிறிலங்கா வரை காணாமல் போன தங்கள் குழந்தைகளுக்கு நீதி கேட்க தாய்மார்கள் ஒன்றாக அணிவகுத்துள்ளனர் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles