தேசிய அடையாள அட்டை இலக்க முறையைமீறிய 99 பேர் உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 340 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 2020 ஒக்டோபர் முதல் நேற்றுவரை அச்சட்டத்தைமீறிய 10 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர.
அதேவேளை, மக்கள் வெளியில் நடமாடுகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என்பது தொடர்பில் இன்னும் கண்காணிப்புகள் தொடரும்.










