NOCSL Next Champஇன் ரவிந்து ஜெயசுந்தர, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறத் தயாராகவுள்ளார்

கிரிஸ்புரோ மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து ஆரம்பித்த NOCSL Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தில் சிறந்து விளங்கிய இளம் வீரரான ரவிந்து ஜயசுந்தர இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை உலக கனிஷ்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக பங்குபற்றி பதக்கம் வெல்ல எதிர்பார்த்துள்ளார்.

2020 சர்வதேச கனிஷ்ட விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ரவிந்து, இதுவரை உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார், மேலும் அவர் உலக கனிஷ்ட சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்குவார் என்று நம்பப்படுகிறது.

சர்வதேச உலக கனிஷ்ட விளையாட்டுப் போட்டி என்பதால், தாம் நாட்டை விட்டு வெளியேறி சர்வதேச அரங்கில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை என்றும் போட்டித் தொடர் குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தனக்கு புதிய அனுபவமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

“இவ்வளவு தூரம் வருவதற்கு வாழ்க்கையிலும் விளையாட்டிலும் நிறைய தியாகம், பயிற்சி மற்றும் நிறைய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த. சர்வதேச கனிஷ்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இலங்கைக்கு மீண்டும் ஒரு பதக்கத்தை கொண்டு வருவதற்கு என்னால் இயன்றவரை முயற்சி செய்ய முடியுமென நான் நம்புகிறேன் மற்றும் அற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன்.” என தெரிவித்தார்.

தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பளித்த NOCSL-Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “NOCSL-Crysbro Next Champ புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு நான் மிகவும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். எங்கள் விளையாட்டுத் தேவைகளை கவனித்துக் கொள்ளவும் எங்கள் குடும்பம் கடினமாக உழைக்க வேண்டும், குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலங்களில். அத்தகைய நேரங்களில் NOCSL-Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டம் எங்களுக்கு பலமாக இருந்தது. NOCSL-Crysbro Next Champ திட்டத்தின் மூலம், எனது திறனை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன், மேலும் NOCSL-Crysbro Next Champ திட்டம் நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்வதற்கான பலத்தை எனக்கு அளித்துள்ளது. தேசிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் கிரிஸ்புரோ நிறுவனத்தின் ஆதரவிற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். இதுபோன்ற திட்டங்கள் மூலம் என்னைப் போன்ற மற்ற வீரர்களுக்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

Crysbro ‘Next Champ’ நிகழ்ச்சித் திட்டம் இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்து வருவதுடன், 150க்கும் மேற்பட்ட திறமையான இலங்கை விளையாட்டு வீரர்களை சர்வதேச அரங்கிற்கு உயர்த்தியுள்ளது.

இளைஞர் ஒலிம்பிக் போட்டி 2022, ஆசிய விளையாட்டுப் போட்டி 2022, பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2022 மற்றும் 2023 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகளுடன், இந்தப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நேபாளத்தில் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களும் NOCSL-Crysbro Next Champ திட்டத்தின் அனுசரணையாளர்களாக உள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles