ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 139 பந்துகளில் அவர் 210 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அவிஷ்க பெர்ணான்டோ 88 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களையும் சமரவிக்கிரம 44 ஓட்டங்களையும் பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 381 ஓட்டங்களைப் பெற்றது.