கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கி செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பேருந்து சேவை இல்லாத காரணத்தால் அங்கேயே உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், மஸ்கெலியா உள்ளிட்ட மலைநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பல மணி நேரமாக பேருந்துக்காக காத்திருப்பதாகவும், இதனால் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்போர் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சரும் கவனம் செலுத்தி, கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிய பேருந்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நிலையில் நாவலப்பிட்டி கொழும்புக்கு மேலதிக தனியார் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
மஸ்கெலியா நகரில் இருந்தும் சாமிமலை நகரில் இருந்தும் தலைநகர் கொழும்பு கண்டி யாழ்ப்பாணம் பதுளை கதிர்காமம் போன்ற பகுதிகளுக்கு தனியார் பேருந்து சேவைகள் அதிகரிக்க வேண்டும் அவ்வாறு தனியார் பேருந்து சேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் பயணிகள் நன்மை அடைவர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
