முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் சங்கமித்துள்ளார்.
காலி மாவட்டத்தை தனது அரசியல் கோட்டையாக கொண்டுள்ள ரமேஷ் பத்திரன, முன்னாள் கல்வி அமைச்சர் ரிசட் பத்திரனவின் மகனாவார்.
ராஜபக்ச அணியிலேயே அவர் அரசியல் சமரில் ஈடுபட்டுவந்தார்.
எனினும், 2024 ஜனாதிபதி தேர்தலின்போது நாமலுக்கு ஆதரவளிக்காது, ரணில் விக்கிரமசிங்க பக்கம் நின்று, அவருக்கு நேசக்கம் நீட்டினார்.
இந்நிலையிலேயே மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பக்கம் சென்றுள்ளார். அவருக்கு எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
