வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில்: ஆதரவாக முன்னாள் எம்.பிக்கள் களத்தில்!

“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், ராஜித சேனாரத்ன , மஹிந்த அமரவீர உட்பட முன்னாள் எம்.பிக்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போதே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டில் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் ரணில். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அவருடன் இருந்தோம். தற்போதும் நிற்கின்றோம்.” – என்றார்.

அதேவேளை, நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதிமன்றம் ஊடாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மேலும் சிலர் நம்பிக்கை வெளியிட்டனர்.

Related Articles

Latest Articles