ரஷ்ய தூதுவர் – ஜனாதிபதி செயலர் சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் பாதிக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் German Fedorov மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles