சாதனைகளை படைத்த சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.

இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோஹ்லி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.

நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles