நுவரெலியாவில் ஆகக் குறைந்த வெப்பநிலையான 3.5 பாகை செல்சியஸ் மற்றும் பூமியின் வெப்பம் தரைமட்டத்தில் மறை (-1.2) ஆகவும் இன்று 22.01.2026 பதிவாகியுளளதாக நுவரெலியா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நுவரெலியாவின் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.கடும் குளிருடனான காலநிலையே நிலவுகின்றது.
நுவரெலியாவில் காலையில் சுமார் 7.30 மணிவரை கடுமையான குளிருடனான காலநிலை நிலவுகின்றது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்கின்றவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை பெரிதும் விரும்புகின்றார்கள்.
டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்த காலநிலை இடை இடையே நிலவுகின்றது.
நுவரெலியாவின் காலநிலை 3.5 பாதை செல்சியஸ் என்பது பூமியில் இருந்து 4 நான்கு அடிக்கு மேல் நிலவுகின்ற வெப்பநிலையையே குறிப்பிடப்படுகின்றது.ஆனால் தரைமட்டத்தின் வெப்பநிலையானது மறை (-1.2) ஆக இருக்கின்றது.
இதன் காரணமாகவே நுவரெலியாவின் பல பகுதிகளிலும் பூம்பணி நிலவுகின்றது.பொதுவாகவே காலநிலை அவதான நிலையம் இந்த தறை மட்டத்திலான வெப்பநிலையை செய்திகளின் ஊடாக வெளியிடுவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










