வெசாக் தானசாலை வரிசைமீது கெப் மோதியதில் அறுவர் பலி!

மீகொட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானசாலையொன்றின்மீது கெப்ரக வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

15 வயது சிறுமி, இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பிலியந்தலை மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மது அருந்திய நிலையிலேயே வாகனத்தை செலுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles