Softlogic Life இன் வளர்ச்சிக்காக 5.6 பில்லியன் ரூபா முதலீடு செய்யும் FinnFund, NorFund மற்றும் MunichRe

மேம்பாட்டு நிதி நிறுவனங்களுடனான மைல்கல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பதில் சொஃப்ட்லொஜிக் லைஃப் ஆயுள் காப்புறுதி பி.எல்.சி. நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நோர்வே முதலீட்டு நிதி – நோர்பண்ட் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு லிமிடெட் ஃபின்னிஷ் நிதி – பின்ஃபண்ட் நிறுவனம் ஆகியவற்றுடன் நிறுவனத்தின் வர்த்தக நோக்களை மேலும் மேம்படுத்துவதற்கு நிதி வழங்கும் முகமாக ஆகஸ்ட் 24, 2020 அன்று 15 மில்லியன் டொலர் Tier II துணை கடன் பரிவர்த்தனையில் கைசாத்திட்டுள்ளது. நோர்பண்ட் மற்றும் ஃபின்ஃபண்ட் ஆகியவை முறையே நோர்வே மற்றும் பின்லாந்து அரசாங்கங்களால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களாகும், இதன் நோக்கங்கள் உலகெங்கிலும் உள்ள பொறுப்பான மற்றும் இலபகரமான வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் நிலையான வளர்ச்சிக்கு நிதியளிப்பதாகும். இந்த நிதி பரிமாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் தற்போது முழு உலகிலும் கொவிட்-19 தொற்றுநோய் பரவும் அச்சம் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்த நிதி பரிமாற்றங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

சொஃப்ட்லொஜிக் லைஃப் 2020 மார்ச் மாதத்தில் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மறு காப்பீட்டு பரிவர்த்தனையை மேற்கொண்ட Münchener Rückversicherungs-Gesellschaft – MunichRe நிறுவனம் உலகில் சிறந்த மறுகாப்பீடு, முதன்மை காப்பீடு மற்றும் காப்பீடு தொடர்பான இடர் தீர்வுகளை வழங்கும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஏற்பாடு தெற்காசிய ஆயுள் மற்றும் சுகாதார மறு காப்பீட்டு அரங்கில் ஒரு புதுமையான முன்னணி பரிவர்த்தனையாக பார்க்கப்படும்.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் தொழிலுக்கு கிடைக்கக் கூடிய சிறந்த வாய்ப்புக்களை அதிகரிக்கும் இந்த மைல்கல் பரிவர்த்தனைகளை இலங்கையின் மூன்றாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியானது 2020 மார்ச் 31ஆம் திகதி வரையிலான நிலவரப்படி சந்தையில் 16.2% பங்கைக் கொண்டு வந்துள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தைப் பங்கை இரட்டிப்பாக்கி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆயள்களை உள்ளடக்கியது. 2019ஆம் ஆண்டில் நிறுவனம் 25% வளர்ச்சியடைந்து 11% தொழில் வளர்ச்சிக்கு மாறாக 247,755 காப்புறுதி கொள்கைகளை வழங்கியதுடன் சந்தையில் 33% பங்குகளை அதிக எண்ணிக்கையிலான காப்புறுதி கொள்கைகளை விற்பனை செய்தது.

‘ NorFund, FinnFund மற்றும் MunichRe ஆகிய இந்த முதலீடுகள் இலங்கையின் காப்பீட்டுத்துறையில் சொஃப்ட்லொஜிக் லைஃபை ஒரு பலம் மிக்க வர்த்தகமாக உருவாக்குவதற்கு நாங்கள் செய்துள்ள உறுதியான நடவடிக்கைக்கு சான்றாகும். மேலும் நாங்கள் ஏதாவதொரு சிறப்பான ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்பதற்கு ஒப்புதலாகவே இதனை நாங்கள் எண்ண விரும்புகின்றோம்.’ என சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ் பி.எல்.சி.இன் தலைவர் அசோக் பத்திராஜே தெரிவித்துள்ளார்.

NorFundஇன் பேச்சாளர் ஆசிய பிராந்திய பணிப்பாளர் Fay Chetnakarnkul

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சர்வதேச நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எமது செயற்பாடுகளை மேம்படுத்துவதில் நாங்கள் எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளோம். மேலும் நிறுவனத்தின் பங்குதாரர்களான Leapfrog முதலீடுகளுடன் சேர்ந்து எங்கள் திறன்களை மேலும் மேம்படுத்வதற்கான சாத்தியக்கூறுகளை தொடர்ந்தும் மதிப்பீடு செய்கின்றோம்.

இலங்கையின் வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்து நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம், மேலும் ஆயுள் காப்புறுதித் துறையில் குறைந்த ஊடுதுவலை எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பாகக் கருதுகின்றோம். 2019ஆம் ஆண்டில் சந்தையில் விற்கப்படும் மூன்றில் ஒன்று சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி என்பதிலிருந்து வந்தது என்பதை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம், இது நாங்கள் உள்ளடக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் எங்கள் தயாரிப்பு பல்வகைப்படுத்தலின் அளவிற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.’

இந்த முதலீடானது இலங்கையின் காப்புறுதித்துறையில் NorFund மற்றும் FinnFund இன் முதலாவது முதலீடுகளில் ஒன்றாகும், ஆசியா முழுவதிலும் உள்ள பிற வளரும் சந்தைகளைப் போலவே நிதித்துறையில் சொஃப்ட்லொஜிக் லைஃப் போன்ற நிலையான வணிகங்களுக்கு விரிவாக்க மூலதனத்தை வழங்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

‘NorFun மற்றும் FinnFund ஆகியவை மைக்ரோ நிறுவனங்களுக்கும், வங்கியல்லாத மக்களுக்கும் மூலதன மற்றும் நிதி சேவைகளை வழங்குவதற்கான திறனை வலுப்படுத்த நிதி நிறுவனங்களுடன் ஒத்துழைத்து முதலீடு செய்கின்றன. நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்ளுர் வர்த்தகங்களில் முதலீடு செய்வதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்துடன் சொஃப்ட்லொஜிக் லைஃப் ஒரு சிறந்த பொருத்தமானதொன்று.’ என NorFundஇன் பேச்சாளர் ஆசிய பிராந்திய பணிப்பாளர் Fay Chetnakarnkul தெரிவித்தார்.

‘சொஃப்ட்லொஜிக் லைஃப் தலைமைக் குழு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ஆண்டுகளில், ஒன்றாக, அதன் வளர்ச்சி பயணத்தில் தொடர்ந்து பங்களிக்குமென நம்புகிறோம். அவர்களுடன் இணைந்து செயற்படுவதை நாங்கள் பாராட்டுகின்றோம், மேலும் இந்த முதலீடு பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் மற்றும் இலங்கையின் நிதி சேர்க்கையையும் அதிகரிக்கும் என்று நம்புகின்றோம்.’ என FinFundஇன் முதலீட்டு முகாமையாளர் Ulla-Maija Rantapuska தெரிவித்தார்.

‘MunichRe, சொஃப்ட்லொஜிக் லைஃபுடன் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால உறவைக் கொண்டுள்ளதுடன் மேலும் பல கூட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அவை எமது கூட்டாண்மைக்கு சிறப்பாக செயல்பட்டன. இந்த நிதி மறுகாப்பீட்டு பரிவத்தனை அடுத்த தலைமுறைக்கான ஒத்துழைப்பைக் குறிக்கிறது. அங்கு ஒரு அற்புதமான எதிர்காலத்தின் ஒரு பகுதியாக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.’ என MunichReஇன் பேச்சாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், வாழ்க்கை மற்றும் சுகாதாரம் MunichRe இந்திய கிளை Srinivasa Rao தெரிவித்தார்.

காப்புறுதித்துறையில் புத்தாக்கத்தைக் கொண்ட சொஃப்ட்லொஜிக் லைஃப் சமீபத்தில் Forbes ஆசியாவின் ‘Best Under A Billion 2019’ பட்டியலில் இடம்பிடித்தது. இது வர்த்தக தரவரிசையில் ஆசியாவின் 200 சிறந்த செயல்திறன் கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான வருவாயுடன் நிலையான மேல் மற்றும் கீழ் வரிசை வளர்ச்சியாகும்.

இந்த முக்கியமான சாதனையை அடைய இலங்கையில் உள்ள ஒரே நிறுவனம் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள இரண்டு காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக சொஃப்;ட்லொஜிக் லைஃப் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NorFund தொடர்பாக

NorFund என்பது வளரும் நாடுகளுக்கான நோர்வே முதலீட்டு நிதியாகும். எமது நோக்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதும், நிலையான வளர்ச்சியை உண்டாக்கும் வர்த்தகங்களில் முதலீடு செய்வதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

NorFund நோர்வே அரசாங்கத்திற்கு சொந்தமான நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குகிறது மற்றும் வளரும் நாடுகளில் தனியார் துறையை வலுப்படுத்துவதற்கும் வறுமையை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் மிக முக்கியமான கருவியாகும். துணை சஹாரா ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நேரடி மற்றும் மறைமுக முதலீடுகளுடன் NorFundஇன் போர்ட்ஃபோலியோவின் மொத்த பெறுமதி 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Finfund தொடர்பாக

Finfund ஒரு ஃபின்னிஷ் மேம்பாட்டு நிதி மற்றும் தொழில்முறை தாக்க முதலீட்டாளர் ஆவார். வளரும் நாடுகளில் பொறுப்பான மற்றும் இலாபகரமான தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான உலகத்தை உருவாக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 20-30 திட்;டங்களில் 200-250 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்கிறோம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான வனவியல், நிலையான விவசாயம் மற்றும் நிதி நிறுவனங்களை வலியுறுத்துகிறோம். இன்று FinFundஇன் முதலீடுகள் மற்றும் கடமைகள் மொத்தம் 957 மில்லியன யூரோக்கள், அவற்றில் பாதி ஆபிரிக்காவையுடையது. இந்த நிறுவனத்தில் சுமார் 90 ஊழியர்கள் உள்ளனர். மேலதிக தகவல்களுக்கு றறற.கinகெரனெ.கi ஐப் பார்வையிடவும்

சொஃப்ட்லொஜிக் லைஃப் தொடர்பாக

சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ் பி.எல்.சி. என்பது சொஃப்ட்லொஜிக் கெபிட்டல் பி.எல்.சி.இன் துணை நிறுவனமாகும், இது சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரு நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளர்களான Leapfrogஇன் முதலீடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles