4ஆவது 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 2021 ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அனுமதியுடன் அரங்கேறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மராத்தா அராபியன்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டியில் பங்கேற்பதை அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), அப்ரிடி, சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரேன் (மூவரும் வெஸ்ட்இண்டீஸ்), திசர பெரேரா, இசுரு உதனா (இருவரும் இலங்கை) ஆகியோர் உறுதி செய்துள்ளனர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.










