சீரற்ற காலநிலை: 5,300 பேர் பாதிப்பு: 227 வீடுகள் சேதம்!

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழந்துள்ளனர். 221 வீடுகள் பகுதியளவும், ஆறு வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் ஆயிரத்து 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles