USAID மற்றும் IREX ஆகியவை MoJo Lanka பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக அறிவிக்கின்றன.

Mojo Lanka பயிற்சி நிலையம் — இலங்கையில் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலை கற்றுக்கொள்வதற்கான புதிய தளமாகும்.

கொழும்பு, இலங்கை – சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகம் (USAID) மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனைகள் சபை (IREX) ஆகியன இலங்கையில் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலை முன்னுரிமைப்படுத்தும் வகையில் Mojolanka.lk என்ற இணையத்தளத்தையும், கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலில் வலுவாக மும்மொழிகளிலும் நிபந்தனைகளை வழங்கும் ஒரு தளமான MoJo Lanka பயிற்சி நிலையத்திற்கான தாயகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.

ஜூன் 24-25, 2023 இல் திட்டமிடப்பட்டுள்ள MoJo Lanka கைத்தொலைபேசி மூலமான ஊடகவியல் விழாவை நோக்கிய முதற்படியாக இந்த அறிமுகம் உள்ளது.

USAID இன் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுவூட்டல் (MEND) நிகழ்ச்சித் திட்டம் IREX உடன் இணைந்து இலங்கையில் நடுநிலையான நம்பகத்தன்மை மிக்க செய்திகள் மற்றும் புறநிலை செய்திகள் மற்றும் தகவல்களுக்கான குடிமக்களின் கேள்வியை அத்துடன் அவற்றுக்கான அணுகலை மேம்படுத்துகிறது. MENDஆனது நாட்டில் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலில் முன்னோடியாக இருந்து வருவதுடன், நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள கைத்தொலைபேசி மூலமான ஊடகவியவியலாளர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றது.

MoJo இலங்கை பயிற்சி நிலையம் என்பது கைத்தொலைபேசி மூலமான கதைசொல்லலின் அடிப்படைகள் பற்றிய தொடர் விளக்க காணொளிகளைக் கொண்டுள்ள ஓர் மெய்நிகர் பயிற்சி மையமாகும். காணொளிகள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றதுடன், இந்த துறையில் உள்ள நிபுணர்களான: டேவிட் ஹேவர்ட், காணொளி ஊடகவியலாளர்களால் வழிநடாத்தப்படும் முதல் BBC செய்தி அறையின் ஆசிரியர்; K.C சாரங்க, விருது பெற்ற இலங்கையின் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலாளர்; மற்றும் நடராஜா மணிவாணன், இலங்கையை தளமாகக் கொண்ட ஊடகப் பயிற்சியாளர் மற்றும் சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. MoJo Lanka பயிற்சி நிலையத்தின் அனைத்து தயாரிப்புகளையும் Mojolanka.lk இல் பார்வையிடலாம்.

எதிர்வரும் வாரங்களில், இலங்கையின் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலாளர்களை முன்னுரிமைப்படுத்தும் நோக்கில் MEND ஒரு போட்டியை அறிவிக்கவுள்ளது. போட்டி ஆக்கங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நடுவர்களால் தீர்மானிக்கப்படுவதுடன் வெற்றியாளர்கள் ஜூன் மாதம் நடைபெறும் MoJo Lanka விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.

“இலங்கையில் சுதந்திரமான தகவல் பாய்ச்சலுக்கு கைத்தொலைபேசி மூலமான ஊடகவியல் ஒரு மகத்தான முன்னேற்றமாகும்” என USAID செயற்திட்ட பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் தெரிவித்தார். “நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பொறுப்பான ஊடகங்கள் ஜனநாயகச் சமூகங்களின் மூலக்கல்லாகும், மேலும் ஜனநாயகம் பல இடங்களில் அழுத்தத்தின் கீழ் இருக்கும் இந்தக் காலங்களில் மிகவும் முக்கியமானதாகும். MoJo இலங்கை பயிற்சி நிலையத்தின் வெற்றியை USAID எதிர்பார்க்கிறது” என்று அவர் கூறினார்.

“MoJo இலங்கை பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று MEND இன் குழு தலைவர் ஜீன் மக்கென்சி தெரிவித்தார். “கைத்தொலைசி மூலமான ஊடகவியல் வேறு எந்த வழியையும் பெற இயலாத ஒரு சமூகத்திற்குள் ஒரு வழியை வழங்குகின்றது. Mojolanka.lk இணையத்தளம் மற்றும் எதிர்வரும் விழாவின் ஊடாக, IREX ஆனது இலங்கையர்கள் தங்கள் கதைகளைச் சொல்லும் திறன்களைப் பெற உதவுகின்றது. இந்த வகையான ஊடகவியலுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நாங்கள் உறுதியாக உணர்வதுடன், அதன் வளர்ச்சியை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும் தகவலுக்கு, www.mojolanka.lk ஐப் பார்வையிடவும்

IREX இன் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுவூட்டல் (MEND) நிகழ்ச்சித் திட்டம் இலங்கையில் eLepiyahd, நம்பகரமான மற்றும் புறநிலை செய்திகள் மற்றும் தகவல்களுக்கான குடிமக்களின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. USAID மூலமாக அமெரிக்க மக்களின் ஆதரவால் இந்த செயற்திட்டம் சாத்தியமானது.

ஊடக விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:

அனுகி பிரேமச்சந்திர – தகவல் தொடர்பாடல் முகாமையாளர், IREX MEND
மின்னஞ்சல் – apremachandra@irex.org
தொலைபேசி – +94 774858401

Related Articles

Latest Articles