Viral Video : வான் உயர்ந்த கட்டத்தின் வெளிப்புறச் சுவரில் அசாத்தியமாக நடந்த சிறுமி!

பெற்றோர் கவனக்குறைவு, அடுக்குமாடி கட்டிடத்தின் வெளிப்புற சுவரில் அசால்டாக நடந்து சென்ற சிறுமி.

தற்போது இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் ஒரு பெண் கட்டிடத்தில் லெட்ஜ் எனப்படும் குறுகிய பகுதியின் வழியே நடந்து செல்கிறார். இந்த வீடியோ உண்மைதானா? என சரிப்பார்க்கப்படாத நிலையில் இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு எங்கு நடந்தது என சரியாக தெரியவில்லை. ஆனால் சிலர் இது தானேவில் உள்ள ஹிராந்தனி மீடோஸ் என்னும் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு பிரிவினர் இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர். சிலர் இது குர்கானில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தன்மய் ஷிண்டே என்பவர்தான் இந்த வீடியோவை பகிர்ந்தவர். இது குறித்து அவர் தானே போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து கூறும்போது “இந்த வீடியோவில் ஒரு பெண் கட்டிடத்தின் வெளியே உள்ள பேட்சில் நடந்து செல்வதை நீங்கள் காணலாம். இது தானேவில் உள்ள ஹிரானந்தனி மீடோஸாக இருக்க வேண்டும்.

அந்த வீடியோவில் பேசிய நபர் அந்த பெண் மூன்றாவது முறையாக அவ்வாறு செல்வதாக கூறியுள்ளார். இதை நீங்கள் தெளிவாக கேட்கலாம்” என்றார். இது குறித்து வேறு சிலர் கூறும்போது குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்கு வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். என கூறுகின்றனர்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் இன்னும் அறியப்படவில்லை என்றாலும் இது போன்ற பொறுப்பற்ற உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மேலும் மற்றவர்களும் இது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் நாம் தடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு பெற்றோராக இருக்கும் பட்சத்தில் உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களது செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக உள்ளது.

 

Related Articles

Latest Articles