“கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) வேண்டும்!

கடல்-கடந்த இந்திய குடியுரிமை(OCI), தூதரக கல்வி அறக்கட்டளை தொடர்புகளில் சிறந்த தீர்வுகளை எதிர்பார்கிறோம்! மனோ கணேசன், இந்திய தூதர் சந்தோஷ் ஷாவிடம் எடுத்துரைப்பு!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI) வழங்கல், இலங்கை இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, இன்றைய சமூக மலையக வளர்ச்சிக்கு ஏற்ப இந்நிறுவனத்தை புனரமைக்க வேண்டும்.

இது தொடர்பான முன்மொழிவுகளை, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் இன்றைய இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகிய உங்களிடமும், இதற்கு முன்னாள் கடமையாற்றிய, கோபால் பாக்லே ஆகியோரிடமும் நாம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக சமர்ப்பித்து உள்ளோம்.

இந்நிலையில் இந்த எமது முன்மொழிவு யோசனைகளை ஏற்று, அவற்றுக்கு உரிய தீர்வுகளை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு இலங்கைக்கான இந்திய தூதராகிய உங்களை அறிவார்ந்த பங்களிப்பும் இருக்க வேண்டும், என எடுத்து கூறினேன் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர், சர்வதேச துறைக்கான ஜமமு உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளடங்கிய தூதுக்குழுவுக்கும், இந்திய தூதர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது, இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபுவும் கலந்துகொண்டார். இது தொடர்பில் மனோ கணேசம் கூறியதாவது:

இலங்கை வாழ் மலையக தமிழர்களின் ஜனத்தொகை சுமார் 15 இலட்சம் ஆகும். இதில் 10 இலட்சம் பேர் தோட்ட பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இதில் ஆக ஒரு இலட்சம் பேர்தான் இன்று தோட்ட தொழிலாளர்களாக தொழில் செய்கிறார்கள். ஆகவே இந்த சமூகம், சுய முயற்சியால் பல்வேறு தொழில், வர்த்தக, துறைகளில் வளர்ந்து, இன்று ஒரு தேசிய சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்து விட்டது.

இலங்கை மக்கள் எல்லோரும் ஏறக்குறைய இந்திய வம்சாவளி மக்கள்தான். சமீபத்தைய இந்திய வம்சாவளி மக்கள், மலையக தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் இந்திய வம்சாவளி என்ற அடையாளம் மறைக்க பட முடியாதது. மறைக்க பட அவசியமும் இல்லை. பாரத நாட்டுக்கு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மீது பாரிய தார்மீக கடப்பாடு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் நாம் இங்கு வந்து கலந்து பேசுகிறோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் இன்றைய இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகிய உங்களிடமும், இதற்கு முன்னாள் கடமையாற்றிய, கோபால் பாக்லே ஆகியோரிடமும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, எமது பிரதான தேவைகள் தொடர்பில் எழுத்து மூல ஆவணங்கள் சமர்பித்து உள்ளோம். இவை பற்றி பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் நேரடியாக நான் பலமுறை எடுத்து கூறியும் உள்ளேன். எமது முன்மொழிவுகளை ஏற்று, அவற்றுக்கு தீர்வுகளை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு இலங்கைக்கான இந்திய தூதராகிய உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்,

கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI)

இலங்கையில் வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு, அவர்கள் விரும்பினால், இலகுவான தகுதி அடிப்படையில் கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்தை வழங்குவதை இந்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இத்தொடர்பில், மொரீஷியஸிற்கு பொருந்தும் OCI கட்டமைப்பு ஒரு முன்மாதிரியாக அமையலாம்.

கொழும்பிற்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற எனது கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் சாதகமான பதிலை பிரதமர் வழங்கினார். தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், பிஜி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி சமூகங்கள் வலுவான சமூக-பொருளாதார முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர், அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்.

இந்த பின்னணியில், இலங்கை வாழ் மலையக தமிழருக்கு, விருப்பத்தின் அடிப்படையில், OCI அந்தஸ்தை வழங்குவது ஒரு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையாகவும் அமையும். குறிப்பாக, 1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய நலன்களை முன்னிறுத்தியதாகும். இது, இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதையும், ஆகவே, இந்த அந்தஸ்து, நமது மக்களின், வரலாற்றை அங்கீகரிப்பதுடன், கல்வி, தொழில், தொடர்பாடல், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து சமூகத்தை வலுப்படுத்தும் என்பதையும் என்பது பாரத அரசு உணர வேண்டும்.

கல்வி வளர்ச்சியை விரிவுபடுத்தல்

1946 முதல் இலங்கை இந்திய தூதரகத்தில், செயல்படும் நிறுவனமான தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET), மறுசீரமைக்கப்பட்டு, “இந்திய வம்சாவளி தமிழர்-சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)” என்ற பெயரில் விரிவு படுத்த வேண்டும். இன்று நமது சமூகம் தோட்டங்களை தாண்டி, சமூக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அரசின் நிதி ஆதரவு பெற்ற அனைத்து புலமை பரிசில், கல்வித் வளர்ச்சி திட்டங்கள், இந்த அறக்கட்டளை மூலம் நடைபெற வேண்டும்.

(a) புலமை பரிசில் தொகையையும், எண்ணிக்கையும் அதிகரித்தல்

(b) நமது பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாட ஆசிரியர்களை உருவாக்க தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவல்
(c) மலையகம் தமிழ் பெண்களுக்காக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்
(d) இலங்கைச் சட்டப்படியும், இந்திய நவோதயா பள்ளிகள் முறைப்படியும், இந்து சர்வதேச பள்ளிகளை நிறுவுதல்
(e) நுவரேலிய மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைந்து, மலையக பல்கலைக்கழக வளாகத்தை (High-Lands

University Campus) நிறுவி, எதிர்காலத்தில் இதனை முழுமையான தேசிய பல்கலைக்கழகமாக வளர்த்தல்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles