TikTok ஐ தொடர்ந்து WeChatஇற்கும் தடை!

ஆஸ்திரேலியாவின் அரச நிறுவனங்களில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், WeChat செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஆராய்வதற்கான நாடாளுமன்ற செனட் குழுவே இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. ‘தேசிய பாதுகாப்பு அபாயம்’ குறித்தும் அந்த குழு கவலை வெளியிட்டுள்ளது.

” ஆஸ்திரேலியாவில் அரசு சாதனங்களில் TikTok பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அரச ஒப்பந்ததாரர்களின் சாதனங்களுக்கும் விதிக்கப்பட வேண்டும் வேண்டும், அது WeChat-ஐ உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

மேற்படி இரு செயலிகளும் சீன நிறுவனங்களுக்குரியவை .

எனவே, சீனாவின் தேசிய உளவுத்துறை மேற்படி நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.

Related Articles

Latest Articles