இந்திய உப ஜனாதிபதியிடம் முற்போக்கு கூட்டணி முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் எவை?

“ இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை இந்திய உப ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைக்கும்.” என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் நாளை ஞாயிற்றுகிழமை 19ம் திகதி, இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனுடன் இடம் பெற உள்ள சந்திபின் போது தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில், முன்வைக்க உள்ள முன்மொழிவுகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI) வழங்குங்கள்.

இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, மலையக கல்வி வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும், இந்த இந்நிறுவனத்தின் ஊடாக செய்யுங்கள்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கான உதவி நோக்கங்கள்; வீடமைப்பு, பாடசாலை கல்வி, புலமை பரிசில்கள், பாடசாலை பௌதிக வளங்கள், பல்கலைக்கழக வளாக ஸ்தாபிதம், இந்தியாவின் நவோதயா பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலை, ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கலாசாலை, தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலை, கடல்-கடந்த இந்திய குடியுரிமை இலகு படுத்தல், ஆகிய பல்நோக்கு அடிப்படையிலும், அதேபோல் எமக்கான உதவி தொகை அதிகரிக்கப்படவும், வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன் வைப்போம்.

இந்த முன்மொழிவுகளை, இலங்கைக்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஆகியோரிடமும் நாம் முன் வைத்து உள்ளோம்.

இவற்றை இம்முறை மீண்டும் இந்திய உப-ஜனாதிபதியிடமும் முன் வைக்க உள்ளோம். என்னுடன் கூட்டணியின் பிரதி தலைவர்கள் எம்பி பழனி திகாம்பரம், எம்பி வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.” என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles