“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பி, இன்று ஆட்சியில் இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் வேண்டாமென எமது கட்சியை சேர்ந்த 20 ஆயிரம்பேரை கொன்றவர்கள்தான் இன்று ஆட்சியில் உள்ளனர். இவர்களிடம் எவ்வாறு சிறப்பான எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியும்?
இந்த அரசாங்கம்மீது மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பதை அறிய வேண்டுமானால் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் வாக்குறுதி உள்ளது. எனினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
முடிந்தால் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் யார் பக்கம் என்பது தெரியவரும்.”- என்றார்.










