“ இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 3 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார்.
“இந்தியாவில் பாரிய பிராந்தியங்கள் உள்ளன. அங்குள்ள ஏழை மக்களுக்கு ஒருவேளை உணவுகூட இல்லை. குடிநீர் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்தியா இலங்கைக்கு உதவுவதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கலாம்.” எனவும் தேரர் சந்தேகம் வெளியிட்டார்.










