அடங்க மறுக்கும் மஸ்கெலியா பிளான்டேசன் – ரூ. 1000 வழங்கவும் மறுப்பு! போராட்டம் வெடிப்பு!!

மஸ்கெலியா, பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. லக்‌ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் நாளாந்த சம்பளம் 1000/- முதல் 1200/- வரை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் மட்டும் ரூ.1000/-க்கு குறைவான சம்பளம் கொடுத்து அதிக லாபம் பெற்று அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ஒடுக்கப்படுவதாகவும், தோட்டத் தொழிலாளர்கள், தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும்,, மூன்று வேளை உண்பவர்கள் தறபோது ஒரு வேளை மாத்திரமே உண்பதாகவும், குழந்தைகளுடன் வறுமையில் வாடுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் இறக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன், செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles