அடங்க மறுக்கும் வடகொரியா – அதிசக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

அதன்படி, இன்று வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த ஏவுகணை ஒரு உயரமான பாதையில் ஏவப்பட்டிருக்கலாம் என்று தென் கொரியா கூறியுள்ளது.

இந்த ஏவுகணை 1100 கி.மீ தூரம் வரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக செல்லும் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று சோதனை நடத்திய ஏவுகணை சக்திவாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வெற்றிகரமான சோதனைகளும் உளவு செயற்கைக்கோளுக்கான கேமராக்கள் மற்றும் பிற அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று வட கொரியாவின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles