2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” 2024 இல்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தல் தொடர்பில் எமது கட்சியில் உள்ள சிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. இது சம்பந்தமாக கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.” – என்றும் அவர் கூறினார்.
