‘அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்பு’

கோதுமை மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களும் ஏனையோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பால்மா, கோதுமைமா அரிசி, எரிவாயு சிலிண்டர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய திடீர் விலையேற்றம் காரணமாக குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக குறைந்த சம்பளத்தேயை பெற்று வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளின் விலை மற்றும் கட்டண அதிகரிப்பினால்
தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் வறுமை நிலையை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார கட்டமைப்பைச் சீர்செய்ய முடியாத நிலைமையில் அரசாங்கம் தத்தளிக்கிறது.

அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து தீர்மானங்கள் எடுக்காமல் விதண்டாவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலைமை தொடருமானால் நாட்டில் பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கிய நிலைமை தமக்கு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் அஞ்சத் தொடங்கி உள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles