” என்.பி.பி., ஜே.வி.பி. என்ற எவ்வித பிளவும் அரசாங்கத்துக்குள் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
“ராஜபக்ச மகனின் ரொக்கட்” விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என மொட்டு கட்சியினர் கூறிவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசாங்கம் கூட்டு பொறுப்புடனும், ஒத்துழைப்புடனுமே செயற்பட்டுவருகின்றது. எமது தரப்புக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், என்.பி.பி. ,ஜே.வி.பி. என அணிகள் பிளவுபட்டுள்ளன என்ற மாயையை உருவாக்குவதற்கு சிலர் முற்படுகின்றனர். அது அப்பட்டமான பொய்யாகும். எதிரணிகளுக்குள்தான் குழப்பம் தலைவிரித்தாடுகின்றது.” -என்றார்.