தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பிரதான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த நாளில் மூன்று மாவட்டங்களை மையப்படுத்தி மூன்று பிரதானக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை நகரிலும், மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை நகரிலும், காலி மாவட்டத்தில் காலி நகரிலும் மூன்று கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.










