அநுரவுக்கு மஹிந்தானந்த பகிரங்க சவால்!

பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது கைப்பற்றிகாட்டுமாறு தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜே.வி.பியினர் கடந்த பல தசாப்தங்களாக விமர்சன அரசியலையே முன்னெடுத்துவந்தனர். அப்போது அக்கட்சியினர் எதிரணியில் இருந்தனர். இன்று ஆளுங்கட்சியில் உள்ளனர்.

எனினும், மாற்றம் இல்லை. முன்னாள் அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களே செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகின்றது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு இதை வெளிப்படுத்தியது.

நாம் ஆட்சியைக் கைப்பற்ற முற்படவில்லை. பலமான எதிரணியை அமைக்கவே முயற்சிக்கின்றோம். பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி காட்டட்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles