” அனைத்து கட்சிகளும் அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” – ராஜித கோரிக்கை

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கால எல்லையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், இது விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தனக்கு தனிப்பட்ட ரீதியில் அரசுடன் இணையும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறினார்.

“ ஒரே அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட இரண்டு குழுக்களை, நடைமுறையில் உள்ள சில முரண்பாடுகளைக் காட்டி, பிளவுபடுத்துவது, நாட்டுக்கும், இரு கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இழைக்கும் அநீதி என்பதே எனது கருத்து.” எனவும் ராஜித குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று விசாரணை குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் ராஜித குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles