கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தால் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதிபெற்றதனியார் பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி 200 மாணவர்களுக்கும் மேல் கல்வி பயிலும் பாடசாலைகளில் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட நடைமுறைகளைப்பின்பற்றி சமூக இடைவெளி உள்ளிட்ட விடங்களை கடைப்பிடித்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறை வசதிகள், ஆசிரியர்கள் இருப்பின், அனைத்து வகுப்புகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச்செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.