பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கான மாற்றுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று பதுளை கச்சேரியில் நடைபெற்றது.
பதுளை மாவட்டத்தில் 2362 குடும்பங்கள் மண்சரிபு அபாய வலயங்களில் குடிகொண்டுள்ளனர். தற்போது தொடர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதால் அனர்த்த வலயங்களில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படுக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள மக்கள் வழமைபோல், பாடசாலைகளிலோ, கலாசார மண்டபங்களிலோ தங்கவைக்க முடியாத நிலை காணப்படுகிறது. கொவிட் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருப்பதால் இவர்களுக்கான மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது..
எனவே, இந்தத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட உதவி செயலாளர், மாவட்ட பிரதிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.