அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை – பிரதமர் கவலை

எம்மால் எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.பாதை அபிவிருத்தி,அரச நிர்மாணப் பணிகள் உட்பட பல அபிவிருத்தி பணிகளை நாம் ஓரம் கட்டி விட்டு நாடும் நாட்டு மக்களும் முகங் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலக கெப்பட்டிபொல பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடை நிவர்த்தி செய்து பொது மக்களை பாதுகாத்து போசாக்கு மற்றும் வலிமை மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர்,..

பட்டினியிலிருந்து மக்களை பாதுகாக்கவும், போசாக்கின்மையிலிருந்து குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் பாதுகாத்து கொள்ள விவசாய துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பசி,பட்டினி,பஞ்சம் என்பவற்றிக்கு முற்றுபுள்ளி வைத்து நாட்டில் சுகதேகியான மக்களை உருவாக்குவதே இன்றைய அரசின் முக்கிய நோக்கமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நாட்டின் சகல மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்தி அனைவரையும் தெளிவுப்படுத்தி இத்திட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தி நாம், பல பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் விவசாயத்துறையை முன்னேற்ற விவசாயிகளின் மற்றும் மீன்பிடித் துறையினரின் சகல அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து நாட்டை கட்டியெழுப்ப சகல இனமக்களும் பேதங்களை மறந்து நாட்டிற்காக நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட முன்வர வேண்டுமென்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles