முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(260 காலை 9 மணி முதல் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆவணங்களில் காணப்படும் கையெழுத்து மற்றும் கையொப்பங்களை பரிசோதிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆவணங்கள் இவ்வாறு அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.