அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…..!

2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக அவரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்காக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோ ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles