அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

Update- மட்டக்களப்பு – மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
அம்பாறையில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அவர், அத்துமீறும் வகையில் செயற்படும் காணொளி நேற்று வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் நபரொருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

Related Articles

Latest Articles