” அரச எதிர்ப்பாளர்களை வேட்டையாடவே புதிய பயங்கரவாத தடைச்சட்டம்” – சன்ன ஜயசுமன

” அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படுகின்றது. இச்சட்டமானது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

” மேற்படி சட்டமூலத்தை ஆராய்ந்த பின்னர், ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது இது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்ல. மாறாக அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலமாகும்.

பயங்கரவாதிகளையும், அரச எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக காண்பித்து, அனைத்து அரச எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கான திட்டமே இது. ஜேஆர் ஜயவர்தன அன்று செய்ததையே இவர்கள் இன்று செய்கின்றனர். புதிய சட்டமூலத்தை எமது சுதந்திர மக்கள் சபை எதிர்க்கும்.

அதேவேளை, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால்கூட கைது செய்யப்படலாம். தடுப்பு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இச்சட்டமூலத்தின் பிரகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படுகின்றது. இது நகைப்புக்குரிய விடயமாகும்.

இச்சட்டமூலம் நிறைவேறினால் முழு நாடும், தொடர்ந்து அவசரகால சட்டத்தின்கீழ் இருப்பதுபோல்தான் இருக்கும்.” – எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles