” அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்துடனேயே இருக்கின்றேன். இம்முறை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுகின்றேன். இனி போட்டியிடபோவதில்லை.” – என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் நபர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு செல்லமாட்டேன்.
தேசிய அரசியலில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டேன். கொரோனா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மேயராக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது. எனவே, திட்டங்களை முன்னெடுக்கவும், நான் தலைமைத்துவம் வழங்கிய அணிக்காகவுமே இம்முறை போட்டியிடுகின்றேன். இனிமேல் தேர்தலில் களமிறங்கமாட்டேன்.” – என்றார்.
