ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து, நேரடி அரசியல் போரில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறிது காலம் மௌனம் காத்த ரணில் விக்கிரமசிங்க, கேஸ் சிலிண்டர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தற்போது பிரசாரங்களில் பங்கேற்றுவருகின்றார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு விமர்சிக்கும் இயலுமை இல்லாததால், எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை தற்போது கம்மன்பிலவே நிறைவேற்றி வருகின்றார் என சிலிரண்டர் கூட்டணி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசாங்கம்மீது சொற்போரை ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தி இருந்தார். எனினும், அவர்கள் உரிய வகையில் விமர்சனங்களை முன்வைக்காததால் தற்போது ரணிலே நேரில் களமிறங்கி சொற்போரை ஆரம்பித்துள்ளார். இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பதிலடி கொடுத்துவருகின்றார்.
