அரசியல் ஆட்டம் ஆரம்பம் – ஷகிப் அல் ஹசன் தேர்தலில் வெற்றி

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

பங்களாதேஷின் 12 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா 2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். கடந்த 1986-இலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.

ஆளும் அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஷசன் ஒரு லட்சத்து 50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.

Related Articles

Latest Articles