இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றிய பின்னர் 8 நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், அந்த எட்டு நாட்களுக்கும் மாத்திரம் 7 கோடியே 36 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கடந்த 5,6,7,8 ஆம் திகதிகளிலும், அதன் பின்னர் 19,20,21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடியது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு நாடாளுமன்றம் ஊடாக தீர்வை காணும் நோக்கிலேயே சபை அமர்வுகள் இடம்பெற்றன. விவாதமும் நடைபெற்றன.
நாடாளுமன்றம் ஒரு நாள் கூடுவதற்காக 92 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகை கொடுப்பனவு , ஊழியர்களின் சம்பளம், இதர கொடுப்பனவுகள், மின்சாரம், குடிநீர், எரிபொருள், போக்குவரத்து வசதிகள், உணவு, சிற்றுண்டி, எழுது பொருட்கள் வழங்கல் ஆகியன இச் செலவுகளில் அடங்கும்.
அந்தவகையிலேயே 8 நாட்களுக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. எனினும், அரசியல் நெருக்கடியோ அல்லது பொருளாதார நெருக்கடியோ இன்னும் தீரவில்லை.