பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 7 ஆம் திகதி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.










