‘அரசுக்கு மற்றுமொரு அடி – சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது விமலின் கட்சி’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

அத்துடன், உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவும் இம்மாநாட்டில் பங்கேற்காது என தெரியவருகின்றது.

எனினும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்தரக்கட்சியின் கோரிக்கைக்கு அமைய இம்மாநாடு நடைபெறுவதால்தான் சுதந்திரக்கட்சி பங்கேற்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles