எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பெண் பிரதிநிதியொருவர் நாடாளுமன்றம் வருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.