ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் நிலைமை மோசமாக உள்ளதென பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரேயொரு இரவு நேர பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகிறது.
மழை பெய்யும் போது பஸ்சுக்குள்ளும் மழை நீர் ஒழுக்கு ஏற்படுகிறது. நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதான ஆசனங்களும் அந்த பஸ்சில் கிடையாது.
கரப்பான்பூச்சி, பல்லி தொல்லைகளும் பஸ்சுக்குள் அதிகம் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, தனியார் பஸ் போக்குவரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர். ரெஜினா










