‘அஸ்வெசும’ குறித்து கிராம உத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது குறித்து ஆராய்வு

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் 18வது அமர்வு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது.

இதில் ‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறைகள் மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள், ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் சங்கங்களான இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை முற்போக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம், இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம், பட்டதாரிகள் கிராம உத்தியோகத்தர் சங்கம், அரசாங்க கிராம உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம், அகில இலங்கை நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறை மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முதலில் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக உத்தியோகத்தர்களின் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடன் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்கள் நடத்தும் கலந்துரையாடல்களுக்கான வசதிகளைச் செய்துகொடுக்கத் தேவையான ஒருங்கிணைப்பை வழங்குவதற்கு வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும திட்டத்துடன் இணைந்து செயற்படுவதில் கிராம உத்தியோகத்தர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கேட்டறிந்துகொண்டார். பிரதானமாக அஸ்வெசும திட்டத்துடன் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படுவதாயின் தமக்கான கடமை என்ன என்பது எழுத்துமூலமாகக் குறிப்பிட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கிராம உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், அஸ்வெசுமக் கடமைகளின் போது

மேற்பார்வை செய்யும் அதிகாரிகளாக நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், அஸ்வெசும கடமையை நிறைவேற்றும்போது கிராம உத்தியோகத்தர்களுக்குக் கிடைக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு, பணிப் பொறுப்புகளுக்கான காலக்கெடு, அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போன்றவற்றை எழுத்துப்பூர்வமாக குறிப்பிடுவதும், அவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவு தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கும் உரிய பங்கிற்கும் போதுமானதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு முன்னர், அரசாங்கம் சமுர்த்தித் திட்டத்துடன் ‘விதாதா’ மத்திய நிலையங்களை அமைத்து பொது மக்களுக்குத் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கும், மத்திய வங்கியின் சௌபாக்கியா போன்ற கடன் திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள அஸ்வெசும போன்ற ஒன்றிணைந்த திட்டங்களில் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரவணக்க இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை முழுவதிலும் உள்ள நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் 332 பேர் மற்றும் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்திலிருந்து மூன்று பிரதிநிதிகள் வீதம் கிராம உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைந்து அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீடு மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு, தொழில்நுட்ப ரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய மாற்றங்கள், கொடுப்பனவுகள் போன்ற விடயங்களை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துமாறு குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார்.

அத்துடன், அஸ்வெசுமத் திட்டத்தில் பணியாற்றும்போது கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான பொறுப்பை எழுத்துமூலம் வழங்குவது, அஸ்வெசும தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்போது சட்ட ரீதியாக அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடிய சட்டத்தின் 21 மற்றும் 22வது பிரிவுகளைப் பரிசீலித்து நீக்குவது தொடர்பில் கருத்திற்கொள்ளுமாறு குழுவின் தலைவர் இங்கு பரிந்துரை வழங்கினார். இவ்வாறான திட்டங்களுக்கான அளவுகோல்களைத் தயாரிக்கும்போது அடிமட்டத்திலிருநு்தும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இருதெனியாவ பிரதேசத்தில் யானை மனித மோதல் பிரச்சினை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles