ஆட்களை காணோம்: யாழில் சஜித்தின் கூட்டம் ரத்து!

ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்
யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று (10) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.
நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles