‘ஆட்சியை கவிழ்க்கவும்’ – மக்களுக்கு விமல் அழைப்பு

” இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் அமைச்சல் விமல் வீரவன்ச.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் நிலைமை தொடர்பில் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பஸில் ராஜபக்ச இருக்கும்வரை உள்ளக கலந்துரையாடல்மூலம் தீர்வை எதிர்பார்க்கமுடியாது. அவருக்கு தேவையானவை மட்டுமே இடம்பெறும். அமெரிக்கா மற்றும் இந்தியாவை நோக்கியே நாட்டை
அழைத்துச்செல்கின்றார். எமது நாட்டின் வான்பரப்பின் ஒரு பகுதியும் வழங்கப்பட்டுவிட்டது. தீவுகள் சிலவற்றயும் விற்பனை செய்யவுள்ளனர் எனதகவல் கிடைத்துள்ளது. எனவே, நாடுமீது கடுகளவேனும் பற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கான சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய முன்வரவேண்டும்.

இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும், அவ்வாறு நடந்தால் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். அசிங்கமான அமெரிக்கர் நாட்டைவிட்டு சென்றுவிடுவார். ” – என்றார்.

Related Articles

Latest Articles