“தற்போதைய வழியில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேலிடம் எடுத்துரைத்துவிட்டோம். எனவே, காசா விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் மிகவும் ஆக்கிரோஷமான முறையில் இடம்பெறும் போராட்டங்களை கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் Penny Wongதெரிவித்தார்.
ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் இன்றும், நாளையும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து பரப்புரைகளும் இடம்பெற்றுவருகின்றன.
அத்துடன், மெல்பேர்ணில் உள்ள சில எம்.பிக்களின் அலுவலகங்கள் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பில் விக்டோரிய பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையிலேயே வன்முறைச் சம்பவங்களை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.










