ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றார் டில்ஷான்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷான் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக வலம்வந்த டில்ஷான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனது குடும்பத்தார் சகிதம் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கு கழக மட்ட போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வெற்றிகளில் டில்ஷானின் பங்களிப்பு அளப்பரியது. 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் 500 ஓட்டங்களைப் பெற்றார். அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2014 இல் இலங்கை அணி ரி – 20 உலகக்கிண்ணம் வென்றது. அந்த அணியிலும் டில்ஷான் இடம்பெற்றிருந்தார்.

Related Articles

Latest Articles