வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு படையினர் காணாமல்போயுள்ளனர். விமானம் கடலுக்குள் மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அமெரிக்கா, ஜப்பான் உட்பட 13 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் Talisman Sabre கூட்டு போர்பயிற்சி நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இராணுவத்துக்கிடையிலான பயிற்சியின்போது, பயிர்சியில் ஈடுபட்டிருந்த MRH 90 Taipan விமானமே, Hamilton தீவு பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளானது.
” விமானத்தில் நால்வர் இருந்துள்ளனர், அவர்கள் காணாமல்போயுள்ளனர், மீட்பு பணி தொடர்கின்றது.” – என்பதை பாதுகாப்பு அமைச்சர் Richard Marles உறுதிப்படுத்தியுள்ளார்.